போதிய அளவுநீதிபதிகள் நியமனம் நடைபெறுவது இல்லை | உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் வேதனை !

84

நீதிபதிகள் காலிப்பணியிடங்கள் காரணமாக, நீதிமன்றங்களின் செயல்பாடுகளும், அதன் திறனும் முடக்கப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கெஹர் வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர், 31 நீதிபதிகள் நியமனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளநிலையில், தற்போது, உச்சநீதிமன்றத்தில் 23 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதுபோல, நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், நீதிமன்றங்களின் செயல்பாடுகளும், அதன் திறனும் முடக்கப்படுவதாக தலைமை நீதிபதி கெஹர் வருத்தம் தெரிவித்தார்.
முன்னதாக, தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி டி.எஸ். தாகூர், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை அடிக்கடி விமர்சித்து வந்துள்ளநிலையில், தற்போது நீதிபதிகள் நியமனம் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் வேதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.