கேரளாவில் சக மாணவியை கட்டிப்பிடித்த 12-ம் வகுப்பு மாணவனை தகுதி நீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம்!

661

கேரளாவில் தனியார் பள்ளியில் சக மாணவியை கட்டிப்பிடித்த பிளஸ் டூ மாணவன் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு நடனமாடினர். அப்போது, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசு பெற்ற 12 ஆம் வகுப்பு மாணவியை அதே வகுப்பை சேர்ந்த மாணவன் ஒருவன் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த மாணவனை தகுதி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.