சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை அமைக்கும் முயற்சி..!

688

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்து. தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகும் பவானி மற்றும் சிறுவாணி ஆறுகள் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வழியாக, சுமார் 20கிமீ தூரம் பயணித்து மீண்டும் தமிழகத்தை வந்தடைகிறது. இந்த இரண்டு ஆறுகளின் நீர் ஆதாயத்தை நம்பி சிறுவாணி மற்றும் பில்லுரு அணைகள் கட்டுப்பட்டுள்ளன. இந்த அணைகளில் இருந்து கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல லட்சம் மக்களுக்கு தேவையான குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. இந்தநிலையில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு, 5 இடங்களில் தடுப்பணைகளை அமைத்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே சிறுவாணி ஆற்றின் தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.