கேரள மாநிலம் இடுக்கியில் இன்று முழு அடைப்புப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

320

கேரள மாநிலம் இடுக்கியில் இன்று முழு அடைப்புப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கேரள மாநில மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி, மூணாறு தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் பெண்களைக் கேவலமாகப் பேசியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. எனவே, மணியின் பேச்சைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று காலை தொடங்கிய முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியுள்ளது. இதனால், இடுக்கி வழியாகக் கேரளாவிற்கு செல்லும் தமிழகப் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.