கேரளாவிற்கு கடத்த இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் ..!

205

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு பேருந்து மூலம் புகையிலை பொருட்களை கடத்திச் சென்ற ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற தமிழக அரசு பேருந்தை எல்லைப்பகுதியில் அமரவிளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கேரளாவிற்கு கடத்திச் செல்ல இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதனை கடத்திய நபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.