கேரளாவிற்கு கடத்த முயன்ற 1500 கிலோ ரேஷன் அரிசி சொகுசு காரில் இருந்த சிறிய மூட்டைகள் பறிமுதல்!

352

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு சொகுசு காரில் கடத்தப்பட இருந்த 1500 கிலோ ரேஷன் அரிசியை மாவட்ட பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசிக் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில், மாவட்டப் பறக்கும் படையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சொகுசு காரைத் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் நிற்காமல் வேகமாக சென்ற அந்தக் காரை நீண்ட தூரத்திற்கு சென்று பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது கார் ஓட்டுநர் உட்பட 2 பேர் தப்பி ஓடி விட்டனர். அந்தக் காரை சோதனையிட்டபோது, சிறிய மூட்டைகளில் 1500 கிலோ அளவுக்கு ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல செய்யப்பட்டது.