கேரளாவில் மதுக்கடைகளை திறப்பது மாநில அரசின் உரிமை என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

235

கேரளாவில் மதுக்கடைகளை திறப்பது மாநில அரசின் உரிமை என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் தோல்விகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்குரியது என்று கூறினார். மதுவிலக்கிற்காக கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கேரளாவில் இடதுசாரி அரசு மதுக்கடைகளை திறப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜி. ராமகிருஷ்ணன், இது அந்தந்த மாநில அரசின் உரிமை என்று தெரிவித்தார்.