கேரளாவில் பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரின் உறுப்பை வெட்டிய பெண்ணுக்கு, முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

898

கேரளாவில் பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாரின் உறுப்பை வெட்டிய பெண்ணுக்கு, முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொல்லம் மாவட்டத்தில் உள்ள சட்டம்பி ஆசிரமத்தைச் சேர்ந்தவர் தீர்த்தபாத சுவாமி. அதே பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று பூஜை செய்து வந்தார்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட நபரின் மகளுக்கு சாமியார் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்றிரவு அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய சாமியார் முயற்சித்துள்ளார். ஆத்திரமடைந்த அந்தப் பெண், சாமியாரின் உறுப்பை கத்தியால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த தீர்த்தபாத சுவாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளம் பெண்ணின் நடவடிக்கையை வரவேற்றுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பெண்கள் துணிச்சலுடன் செயல்பட தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.