கேரளாவில் விபத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி!

334

கேரளாவில் சாலை விபத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கேரளாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் உயிரிழந்த செய்தி அறிந்து தான் மிகவும் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
முருகனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர்,
விபத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கவும்,
காயமடைந்த முத்து என்பவரின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.