கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க கேரள முதலமைச்சர் சென்னை வருகை…

120

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அவரை குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உள்ளிட்ட பலர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளார்.இதே போல், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க இன்று சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.