கேரள மக்களுக்கு ரயில்கள் மூலம் 3 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை..!

155

கேரள மக்களின் குடிநீர் தேவைக்காக தெற்கு ரயில்வே சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, மத்திய அரசும், மாநில அரசுகளும் தேவையான உதவிகளை செய்து வருகின்றன. இந்த நிலையில், கேரள மக்களின் குடிநீர் தேவைக்காக தெற்கு ரயில்வே சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து 2.8 லட்சம் லிட்டர் தண்ணீர் சின்டெக்ஸ் டாங்குகளில் நிரப்பப்பட்டு, 15 ரயில் வேகன்கள் மூலம் திருவனந்தபுரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஈரோட்டில் இருந்து 7 ரயில் வேகன்களில் குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.