கேரளாவில்,

கேரளாவில், கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் திருநங்கையர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, திருநங்கைகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர்களுக்கென்று தனி கூட்டுறவு வங்கியை தொடங்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், கேரளா முழுவதும் உள்ள, கலை – அறிவியல் கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில், திருநங்கையர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், கூடுதலாக 2 இடங்கள் உருவாக்கப்பட்டு அவை, திருநங்கையருக்கு ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள், சமூகத்தில் புறக்கணிப்படுவதால், அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு விளக்கமளித்துள்ளது.