ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.சார்பில் கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

299

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.சார்பில் கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கன்னூர் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ரெமித் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முதலமைச்சர் பினராயி விஜயனனின் சொந்த ஊரில் நடைபெற்ற இந்த கொலையை கண்டித்து கேரளாவில் ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டத்துக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி கேரளாவில் பெரும்பாலான இடங்களில்
கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தலைநகர் திருவனந்தபுரத்தில் பேருந்துகள் இயங்கவில்லை. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற பேருந்துகள் எல்லை வரை இயக்கப்படுவதால் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.