கேரளாவில் ஹெல்மெட் அணிந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

331

கேரளாவில் ஹெல்மெட் அணிந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கேரளவில் போக்குவரத்து ஆணையராக டோமின் தச்சங்கிரி பதவியேற்றவுடன், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து செல்வோருக்கு மட்டுமே பங்க்குகளில் பெட்ரோல் வழங்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், புதிய திட்டத்தை இப்போது அவர் அறிவித்துள்ளார். அதன்படி, ஹெல்மெட் அணிந்து பங்க்குகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பரிசு கூப்பன் வழங்கவும், அதில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளதாக தெவித்துள்ளார். முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய நகரங்களில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இத்திட்டம் மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.