கேரளாவில் நடைபெற்ற பாம்பு படகுப் போட்டியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட ஏராளமானோர் கண்டு களித்தனர்.

252

கேரளாவில் நடைபெற்ற பாம்பு படகுப் போட்டியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட ஏராளமானோர் கண்டு களித்தனர்.
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் ஆண்டுதோறும் நேரு கோப்பைக்கான பாம்பு படகு போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு போட்டி, புன்னமாதா ஏரியில் நடைபெற்றது. இதில், 15க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டி தொடங்கியதும் வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒரே நேரத்தில் படகை இயக்கியது கூடியிருந்த
பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கரிச்சால் சுண்டான் அணி நேரு கோப்பையை தட்டிச் சென்றது. கடந்த 1952 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேரு ஆலப்புழா வந்த போது, படகு போட்டியை அவர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.