ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மலர் சந்தையில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.

182

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள மலர் சந்தையில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.
மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி, கேரளாவில் உள்ள அனைத்து மலர் சந்தைகளும் களைகட்டியுள்ளன. ஓணம் பண்டிகையொட்டி, கேரளாவில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தாலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி செல்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த வியாபாரிகள் கேரளாவின் திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தாற்காலிக கடைகள் அமைத்து பூ வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அத்தப்பூ கோலம் போட தேவையான வாடாமல்லி, சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட வண்ண மலர்கள் கேரள மலர் சந்தையை அலங்கரித்துள்ளன.