பா.ஜ.க. தேசிய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க கோழிக்கோடு வருகிறார் பிரதமர் மோடி… கேரளா முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

262

பாஜக தேசிய கவுன்சிலின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரமதர் நரேந்திர மோடி கேரள மாநிலம் கோழிக்கோடு வருகிறார்.
பாரதிய ஜனதா தேசிய கவுன்சிலின் கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று தொடங்கியது. அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் கட்சி நிர்வாகிகளின் முதல்நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர்கள், பொறுப்பாளர்கள், செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்தநிலையில் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று கோழிக்கோடு வருகிறார். இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்ற உள்ளார்.
இதையொட்டி கோழிக்கோடு பகுதியில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள் என சுமார் 2 ஆயிரத்து 500 பிரதிநிதிகள் பங்கேற்க இருப்பதால் கோழிக்கோடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.