கேரளாவில் நடைபெற்ற “மிஸ் ஆசியா அழகி ” போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த டிரிக்ஸியா மரியா மரானா சிறந்த அழகிக்கான பட்டத்தை தட்டிச் சென்றார்.

314

கேரளாவில் நடைபெற்ற “மிஸ் ஆசியா அழகி ” போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த டிரிக்ஸியா மரியா மரானா சிறந்த அழகிக்கான பட்டத்தை தட்டிச் சென்றார்.
சிறந்த திறமை வாய்ந்த ஆசிய அழகியை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும், 2016 ஆம் ஆண்டுக்கான மிஸ் ஆசியா அழகி போட்டி கேரளாவில் நடைபெற்றது. உஸ்பெக்கிஸ்தான், உக்ரைன், திபெத், பெலாரஸ், இலங்கை, ரஷ்யா, மியான்மர், சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளை சேர்ந்த அழகிகள் இதில் கலந்து கொண்டனர். முன்னதாக இசை, நடனம் உள்ளிட்ட வண்ண மயமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அடுத்ததாக போட்டிகளில் பங்கேற்ற அழகிகளின் ஒய்யார அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இதில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நிர்வாகவியல் படிப்பை முடித்த, 23 வயதான டிரிக்ஸியா மரியா மரானா “ஆசிய அழகிக்கான” பட்டத்தை வென்றார். பெலாரஸ் நாட்டை சேர்ந்த யவ்ஹினியா ( Yauheniya) இரண்டாவது இடத்தையும், இந்திய அழகி அன்கிதா காரத் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.