கேரளாவில் ரயிலில் பெண் பலத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், கருத்து தெரிவித்தது குறித்து, முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது

269

கேரளாவில் ரயிலில் பெண் பலத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், கருத்து தெரிவித்தது குறித்து, முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது
கேரளாவில் கடந்த 2013ல் ரயில் பயணித்த சவுமியா என்ற பெண்ணை, கோவிந்தசாமி என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கீழே தள்ளிவிட்டதில் அந்த பெண் உயிரிழந்ததார். இந்த வழக்கை விசாரித்த, திருச்சூர் விரைவு நீதிமன்றம் கோவிந்தசாமிக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கோவிந்தசாமியின் மரணதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, தீர்பை குறைக் கூறி கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து சவ்மியாவின் தாய் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த தீர்ப்பு பற்றி கருத்து கூறியது குறித்து நவம்பர் 11ம் தேதி மார்கண்டேய கட்ஜூ, நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது