என் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும்-மாணவி ஹாதியா கேரளா!

670

ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக வாழ தனக்கு அனுமதி வேண்டும் என்று மாணவி ஹாதியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மாணவி ஹாதியா சேலம் சித்த மருத்துவக் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். பின்னர் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோருடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், தனக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தன் கணவரை பார்த்து பேச அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட ஹாதியா, தனது தந்தை பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.