முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியது பொய் என மத்திய நீர்வளத்துறை அம்பலம்..!

483

கேரள வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாடு தான் காரணம் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியது பொய் என மத்திய நீர்வளத்துறை அம்பலப்படுத்தியுள்ளது.

கேரளாவில் கனமழை காரணமாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து தவித்தனர். இந்த நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், வெள்ளத்துக்கு தமிழக அரசே காரணம் என குற்றஞ்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கேரளா வெள்ளத்திற்கான காரணம் குறித்தும், ஆதாரத்துடன் விளக்கம் அளித்தார். இதனை ஏற்க மறுத்து, கேரள அரசு, வெள்ள சேதம் ஏற்பட தமிழ்நாடு தான் காரணம் என உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பினராய் விஜயன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய நீர் ஆணையம், கேரள வெள்ள பாதிப்புக்கு முல்லைப்பெரியார் அணை திறப்பு காரணம் அல்ல என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய நீர் ஆணையம், மத்திய நீர்வளத்துறைக்கு அளித்துள்ள அறிக்கையில், சரியான நேரத்திற்கு முல்லைப்பெரியார் அணை திறக்கப்படவில்லை என்பதும், அதனால் தான் வெள்ளம் ஏற்பட்டது என்பதும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.