எலிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் பத்து பேர் உயிரிழப்பு..!

280

கேரளாவில் வேகமாக பரவி வரும் எலிக்காய்ச்சலால், நேற்று ஒரே நாளில் பத்து பேர் பலியானதை அடுத்து, இந்த வகை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக அனைத்து மாவட்டங்களும் வெள்ள நீரில், மூழ்கியதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், தற்போது வெள்ளம் வடிந்து, மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி வரும்நிலையில், பல்வேறு தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக வேகமாக பரவி வரும் எலிக்காய்ச்சலால், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கோழிக்கோடு மாவட்டத்தில் 3 பேரும், மலப்புரம் பகுதியில் 2 பேரும், பாலக்காடு, எர்ணாகுளம் மாவட்டங்களில் தலா 2 பேரும், திருச்சூரில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கிய எலிக்காய்ச்சலில் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கேரளாவில் மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில், மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு, தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.