கேரளாவில் வீட்டில் தனியாக இருந்த பாஜக மூத்த தொண்டர் வெட்டி படுகொலை !

225

கேரளாவில் 52 வயதான பாஜக மூத்த தொண்டர் ஒருவர் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநில பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் , கன்னூரில் மலப்புரம் எழுதான் சந்தோஷ் என்ற பாஜக மூத்த தொண்டர் ஒருவர் வசித்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த சந்தோஷை, மர்மநபர்கள் சிலர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு, தப்பியோடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கன்னூர் காவல்துறையினர் சந்தோஷின் உடலைக்கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் படுகொலை என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரளாவை ஆளும் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த படுகொலைக்கு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ள அம்மாநில பாஜக, இந்த சம்பவத்தைக்கண்டித்து, கன்னூர் பகுதியில் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.