பாம்பாற்றின் குறுக்கே 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுவரும் தடுப்பணை பணிகளை தமிழக அரசு தடுத்துநிறுத்த வேண்டும் என அமராவதி அணை பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

275

கேரள மாநிலம் காந்தலூர் அருகே உள்ள பாம்பாற்றின் குறுக்கே 25 கோடி ரூபாய் மதிப்பில் கேரள அரசு தடுப்பணை கட்டிவருகிறது. இதனால், அமராவதி அணைக்குவரும் தண்ணீர் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக, அமராவதி அணைமூலம் பயன்பெறும் 1 லட்சம் விவசாய நிலங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டுகுடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு கட்டிவரும் தடுப்பணையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என அமராவதி அணை பாசன விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.