கேரள மாநிலத்தில் 30 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (எம்) வெளியேறியுள்ளது காங்கிரசிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

207

கேரள மாநிலத்தில் 30 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (எம்) வெளியேறியுள்ளது காங்கிரசிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற காங்கிரஸ் (எம்) கட்சியின் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஐக்கிய ஐனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கே.எம்.மாணி தெரிவித்தார். கேரளாவில், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இருந்து வெளியேறினாலும் மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் கே.எம்.மாணி கூறியுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர்களின் மோசமான செயல்பாடுகளே இதற்கு காரணம் என்று கூறியுள்ள அவர், இனி கேரள சட்டசபையில் தனித்து செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சி கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், முக்கிய கட்சியான கேரள காங்கிரஸ் மாணி பிரிவு, கூட்டணியில் இருந்து விலகியுள்ளது குறி்ப்பிடத்தக்கது,