கேரள முதல்வரை கொல்ல முயற்சியா? கத்தியுடன் பாய்ந்த மர்ம நபர் யார்?

372

டெல்லியில் உள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின், அறைக்குள் கத்தியுடன் நுழைய முயன்ற நபரை பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

டெல்லி சென்றுள்ள கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் கேரள இல்லத்தில் தங்கி உள்ளார். இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் தேசிய கொடி, தன்னுடைய மருத்துவ சான்றுகள் மற்றும் கத்தியுடன் பினராயி விஜயன் தங்கி இருந்த அறைக்குள் நுழைய முயன்றார். அப்போது அங்கிருந்த
முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் கரிப்புழாவை சேர்ந்த விமல் ராஜ் என்பது தெரியவந்தது. மேலும், அவரது மனநலம் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.