நாட்டின் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டியதாக, கேரளாவில் 6 நபர்களை தேசிய புலனாய்வு போலீஸார் கைது செய்தனர்.

306

நாட்டின் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டியதாக, கேரளாவில் 6 நபர்களை தேசிய புலனாய்வு போலீஸார் கைது செய்தனர்.
ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக, கேரளாவில் இருந்து 21 பேர் மாயமானதையடுத்து, என்ஐஏ போலீஸார், அவர்களை டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேடி வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டையின்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் சதித்திட்டம் தீட்டி வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, கண்ணனூர், கோழிக்கோடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது, 6 தீவிரவாதிகளை கைது செய்துள்ள என்ஐஏ போலீஸார், அவர்களை இன்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இந்த நிலையில், கேரளாவில் பிடிபட்டவர்களிடம் தேசிய புலனாய்வு பிரிவினர், நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின்படி, கோவையில் மாநகர போலீஸ் உதவியுடன், தனியார் கல்லூரி மாணவர் நவாஸ் மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதி ரகுமான் உட்பட நான்கு நபர்களை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். பிடிபட்டவர்களிடம் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது பொதுமக்கள் திரண்டதால், பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக கூறி, கோவையில் கல்லூரி படித்து வரும் வாலிபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.