கேரள அரசு அலுவலகங்களில் வேலை நேரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட தடை விதித்து அம்மாநில அரசு பரபரப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

177

கேரள அரசு அலுவலகங்களில் வேலை நேரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட தடை விதித்து அம்மாநில அரசு பரபரப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அரசு அலுவலக நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் அலுவலக வேலை நேரங்களில் ஓணம் உட்பட எந்த பண்டிகைகளும் கொண்டாடக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து அரசுத்துறை தலைவர்களும் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று அம்மாநில தலைமைச் செயலர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு கேரள அரசு அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.