கேரளாவில் ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சென்ற கார் ஓட்டுநர் அளித்த விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…!

2001

கேரளாவில் ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சென்ற கார் ஓட்டுநர் அளித்த விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பெரும்பாவூரில் இருந்து கொச்சி செல்லும் வழியில் பச்சிளம் குழந்தையை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ஒன்று ஏற்றி சென்றது. இந்நிலையில், ஒரு கார் ஒன்று ஆம்புலன்ஸுக்கு வழி விடமால் முன்னாள் சென்று கொண்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில், காரையும் ஓட்டுநர் நிர்மல் என்பரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தான் ஆம்புலன்ஸுக்கு பைலட்டாக செயல்ப்பட்டதாக விளக்கம் அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.