கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட நடிகை..!

453

கேரள தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவரும் நடிகை சூர்யாவுக்கு, கள்ள நோட்டு அச்சடிக்கும் கருவிகளை வழங்கிய இருவரை, காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் கள்ள நோட்டுகளுடன் பிடிபட்ட 3 பேர் அளித்த வாக்கு மூலத்தின்படி, டி.வி. நடிகை சூர்யாவிடம் இருந்து அந்த கள்ள நோட்டுகளை வாங்கியதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து கொல்லத்தில் உள்ள நடிகை சூர்யாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய காவல்துறையினர், அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவதை கண்டு பிடித்தனர். இதையடுத்து நடிகை சூர்யா, அவரது தாய் ரமாதேவி, சகோதரி சுருதி ஆகியோரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தனக்கு சாமியார் ஒருவர் கள்ள நோட்டு கும்பலை அறிமுகம் செய்து வைத்ததாக சூர்யா கூறினார். இந்தநிலையில் கள்ள நோட்டுகளை அச்சடிக்க நவீன கருவிகளை வினியோகம் செய்த கஞ்சியூர் வினு, சன்னி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.