தென்மேற்கு பருவ மழைக்கு கேரளாவில் 110 பேர் உயிரிழப்பு..!

330

கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 110 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

தென்மேற்கு பருவ மழை கடந்த மே 29-ம்தேதி தொடங்கியது முதல் கேரளாவில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, ஏர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கண்ணூர் மாவட்டத்தில் வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளன. கனமழை காரணமாக பாலக்காடு, மழம்புழா, பரப்பிக்குளம், ஆழியார் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு கேரளாவில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.