கேரளாவில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டம் ?

176

இலங்கையில் இருந்து 15 ஐஎஸ் தீவிரவாதிகள் கேரளாவை நோக்கி படகில் வருவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, கேரள கடல் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 256 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக கேரளாவில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் தேசிய புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, கேரளாவில் ஐ எஸ் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில், இலங்கையில் இருந்து கேரளா, லட்சத்தீவை நோக்கி 15 பேர் அடங்கிய ஐஎஸ் தீவிரவாதிகள் குழு, படகில் புறப்பட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, கேரள கடல் எல்லை முழுவதும் தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.