கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆதரவாளர்கள் கொலை மிரட்டல்..!

236

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் ஆதரவாளர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.

சோலார் தகடு பொருத்துவது தொடர்பான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில், உம்மன் சாண்டியின் ஆதரவாளர்கள் தனக்கு கொலை மிட்டல் விடுப்பதாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், சரிதா நாயர் போலீசில் புகார் அளித்துள்ளார். கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சரிதா இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.