மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட இடங்களில் மத்திய குழு ஆய்வு..!

1057

கேரளாவில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலர் சர்மா தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கணக்கிட்டு வருகின்றனர்.

வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் கேரள மாநிலம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நாற்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்திருந்தது. இதனிடையே 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசிடம் கேரளா கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற மத்திய குழுவினர், சேத மதிப்பீட்டை கணக்கிட்டு வருகின்றனர்.

கூடுதல் தலைமை செயலர் பி.ஹெச்.குரியன், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் மத்திய குழுவிடம் சேத விவரங்களை தெரிவித்து வருகின்றனர். வரும் 24-ம் தேதி வரை கணக்கிடும் பணி மேற்கொள்ளப்படும் என்றும், டெல்லி திரும்புவதற்கு முன்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் ஆலோசனை நடத்தப்படும் எனவும் மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர்.