கேரளாவைப் புரட்டிப் போட்ட கனமழை : பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட ராகுல் காந்தி

138

வருகின்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், மத்தியில் மீன்வளத் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கேரளாவைப் புரட்டிப் போட்ட கனமழையால் பல மாவட்டங்களில் கடுமையான வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 400க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிரிழந்தனர். வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கிடையே, நேற்று கேரளாச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹெலிகாப்டர் மூலம் செங்கனூருக்கு சென்றார். அங்கு, முகாம்களில் தங்கியிருந்தவர்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். ஆலப்புழாச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் வெள்ளத்தில் உதவிய மீனவர்களுக்கு கேடயம் வழங்கி கவுரவித்தார்.

அப்போது பேசிய அவர், கடினமான சூழ்நிலையிலும் மனச்சோர்வு அடையாமல், தங்கள் சொந்த படகுகள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்ட மீனவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். வருகின்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், மத்தியில் மீன்வளத் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார். இந்நிலையில், இன்று வயநாடு மாவட்டத்தை 2வது நாளாக ராகுல் காந்தி பார்வையிடுகிறார். இதை தொடர்ந்து, மதியம் கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி டெல்லிக்கு திரும்ப உள்ளதாக தெரிகிறது.