வெள்ள பாதிப்பு : ராகுல் காந்தி இன்றும், நாளையும் நேரில் ஆய்வு!

239

காங்கிரஸ் தலைவர் ராகுல், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை இன்றும், நாளையும் நேரில் பார்வையிடுகிறார்.

கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டதில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், வீடு, வாசல் மற்றும் உடமைமைகளை இழந்த ஆயிரக்கணக்கான கேரளா மக்கள் 2 ஆயிரத்து 787 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை இன்றும், நாளையும் நேரில் பார்வையிடுகிறார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் மீனவர்களையும், நிவாரண உதவிகள் செய்த தன்னார்வலர்கள் உள்ளிட்டோரையும் சந்திக்க இருக்கிறார்.

இன்று திருவனந்தபுரத்திற்கு வரும் ராகுல், வெள்ளம் பாதித்த பகுதிகளான செங்கன்னூர், ஆலப்புழா, மற்றும் அங்கமலை ஆகிய பகுதிகளை பார்வையிடுகிறார். இரண்டாவது நாளான நாளை வயநாடு மாவட்டத்தை பார்வையிட்ட பின், கோத்தலா கிராமத்தையும் பார்த்துவிட்டு மதியம் கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி டெல்லி திரும்ப உள்ளதாக டெல்லி காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.