கேரள இயல்பு நிலைக்கு திரும்ப அரசு துரித நடவடிக்கை..!

369

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சீர்குலைந்துள்ள கேரளாவை இயல்பு நிலைக்கு கொண்டு வர மாநில அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

கேரளாவில் பெய்த கனமழையால் அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மின்கம்பங்கள் சாலைகள் சேதம் அடைந்தன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 242 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில், பாதிக்கப்பட்ட சாலைகள் மேம்பாலங்களை சீரமைக்கும் பணியும், மின்கம்பங்கள், மின் இணைப்புகளை சரி செய்யும் பணியையும் மாநில அரசு துரித படுத்தியுள்ளது. இந்த பணிக்காக பல்வேறு மாநிலங் களில் இருந்தும் வரவைக்கப்பட்டுள்ள ஊழியர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். இதேபோல் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்கும் பணியில் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.