ஒரு மாத சம்பளத்தை வழங்க உள்ளோம் – முதல்வர் பழனிசாமி

470

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒரு மாத சம்பளத்தை அளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், காலிங்கராயன்பாளையத்தில் உள்ள நிவாரண முகாமில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதலமைச்சர் பழனிச்சாமி வழங்கினார். பின்னர், ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பவானி ஆற்றின் கரையோரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தரப்படும் என்று தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதனையடுத்து கோவைக்கு சென்ற அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழக எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.