மழையின் கோரத்தாண்டவத்தால் நிலைகுலைந்த மாநிலம் : 324 பேர் பலியாகியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

176

கேரளாவில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, நேற்று, ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் கேரளா மாநிலமே நிலைக்குலைந்துள்ளது. 100 ஆண்டு கால வரலாற்றில் அம்மாநிலம் இதுபோன்ற பேரழிவை சந்தித்தது இல்லை என்று முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார். அதேசமயம் வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி இதுவரை 324 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவமும் மீட்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே மழை தீவிரமடைய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால் கேரள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த சூழலில் கேரள மாநில மீட்பு பணிகளுக்கு தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களும் உதவி கரம் நீட்டியுள்ளன. தற்போது தெலுங்கானா அரசு 25 கோடியும், ஆந்திர அரசு 10 கோடியும் நிவாரணம் அறிவித்துள்ளன.