தொடர் கனமழையால் கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 28ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு..!

211

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 28-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை பேரழகு கொண்ட கேரளாவில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. 33 அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதுவரை 114 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். வீடுகளை இழந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளபாதிப்புகளில் சிக்கிய 14 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எனப்படும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக காற்றுடன் பெரு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்தச் சூழலில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 28-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளாவில் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 28-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரழகு கொண்ட கேரளாவில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. 33 அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதுவரை 114 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். வீடுகளை இழந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளபாதிப்புகளில் சிக்கிய 14 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எனப்படும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக காற்றுடன் பெரு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்தச் சூழலில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 28-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.