கேரளாவை சீர்குலைத்த மழை வெள்ளம் : 97 பேர் உயிரிழப்பு

192

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 97 பேர் பலியாகியுள்ளனர்.

இயற்கை பேரழகு கொண்ட கேரளாவில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. 33 அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதுவரை 95 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மலப்புரம் மாவட்டத்தில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாகினர்.

பத்தனம்திட்டா, கண்ணூர், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, இடுக்கி, எர்ணாகுளம் உள்பட பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வீடுகளை இழந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளபாதிப்புகளில் சிக்கிய 14 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக காற்றுடன் பெரு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.