தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்..!

202

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவில் தொடர் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து அணையின் 13 மதகுகள் திறக்கப்பட்டு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் இடுக்கி அணைக்குச் செல்கிறது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் தேக்க கொள்ளளவை குறைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் மிக அதிக அளவு மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.