கேரளா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி உதவி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

121

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்;மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள முதலமைச்சர்,வெள்ள நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுவதாக கூறியுள்ளார்.கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என்றும்,கேரள மக்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.