உயிர் காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்க கேரளா அரசு முடிவுவெடுத்துள்ளது.

452

உயிர் காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்க கேரளா அரசு முடிவுவெடுத்துள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிர் காக்கும் அனைத்து வகையான மருந்துகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா மாநில மருத்துவ பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் இந்த மருந்துகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள் இதனை மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில் மானிய விலை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில், மொத்தம் 245 வகையான மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 125 கோடி ரூபாயை மாநில அரசு ஓதுக்கீடு செய்துள்ளது. காருண்யா திட்டத்தின் கீழ், இத்தகைய மருந்துகள் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.