கர்நாடகாவில் கனமழை: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

250

ஓசூர், ஜூலை. 30–
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 2,320 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம்,மோரனப்பள்ளி, பாத்த கோட்டா, ஆழியாளம், குக்கலப்பள்ளி, கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொடர்ந்து 3 நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காமராஜ் நகர் ஏரி , பேடரப்பள்ளி ஏரி, சாந்தாபுரம் ஏரி உள்ளிட்டவைகள் நிரம்பி வழிகின்றன. மேலும்த ரைப்பால சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.