ஊழலுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும் : கெஜ்ரிவால் மற்றும் கமல் அழைப்பு.

242

ஊழலுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலும், நடிகர் கமல்ஹாசனும் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிராக டுவிட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சென்னை வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் கமல் ஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம், தூய்மையான அரசியலை முன்னெடுத்து சென்று மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் தங்களின் உறவினர்கள் என்று தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என்று கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார்.