சென்னைக்கு வந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், நடிகர் கமல் ஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

291

சென்னைக்கு வந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், நடிகர் கமல் ஹாசனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிராக டுவிட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். மக்களிடமிருந்து அழைப்பு வந்தால் அரசியலுக்கு வருவேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் கமல் ஹாசனை சந்தித்து பேசினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழக அரசியல் நிலவரம், தூய்மையான அரசியலை முன்னெடுத்து சென்று மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.