தமது அலுவலக ஊழியர்கள் எந்த ஊழலும் செய்யவில்லை – துணை நிலை ஆளுநர் கிரண் பேடி

480

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதாக, முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிவோர், தொழில் நிறுவனங்களிடம் சி.எஸ்.ஆர். நிதியை தன்னிச்சையாக வசூலித்து, சொந்த நலனுக்கு பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார். துணை நிலை ஆளுநர் அலுவலக ஊழியர்களுக்கு சி.எஸ்.ஆர். நிதியை வசூலிக்க அதிகாரமில்லை என குறிப்பிட்ட முதலமைச்சர் நாராயணசாமி, இந்த ஊழலுக்கு கிரண் பேடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் சி.எஸ்.ஆர் நிதி கொடுக்குமாறு பல்வேறு தரப்பினர் மிரட்டப்படுவதாகவும் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் கிரண் பேடி , தமது அலுவலக ஊழியர்கள் எந்த ஊழலும் செய்யவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். சமூக சேவை புரிபவர்களுக்கு மட்டுமே தங்களது அலுவலகம் உதவி புரிந்து வருவதாகவும் கூறியுள்ளார்.