கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அதிமுக வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

289

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அதிமுக வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தேசிய விநாயகம் பிள்ளையின் 63 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு அதிமுக வினர் அஞ்சலி செலுத்தினர். மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் கவிமணியின் சிலைக்கு மாலை அணிவித்தார். 1876 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் பிறந்த தேசிக விநாயகம் பிள்ளை பக்திப் பாடல்கள், இலக்கிய பாடல்கள், தேசிய பாடல்களை பாடியுள்ளார். இவரது இலக்கிய சேவையை பாராட்டு வகையில் பச்சயப்பன் கல்லூரி இவருக்கு கவிமணி பட்டத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.