காவிரி நீர் இருப்பை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைப்பதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

291

காவிரி நீர் இருப்பை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைப்பதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காவிரி நீரின் இருப்பை ஆய்வு செய்ய மத்திய அரசு வல்லுநர் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி நீர் இருப்பை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கும மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் வல்லுநர் குழு தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்கவும் முடிவு செய்யப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 4 மாநிலங்களுக்கு காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக கருத்தை தெரிவிக்குமாறு மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நிபுணர் குழு அமைக்க கருத்து கேட்கப்பட்டது.